உத்தரப்பிரதேச நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து
உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் 21 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்தை குடித்துள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் அரசு குற்றசாட்டைத் தொடர்ந்து இந்திய அரசு தரப்பில் ஆய்வு செய்ய விசாரணைக்குழு அமைக்கப்படவுள்ளது.