உலகம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை - பலியோனோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு !!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை - பலியோனோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு !!
கனமழையால் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பல நகரங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
கனமழையால் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.