மும்பை: 12 வயது சிறுமியை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கேட்ட காதலன் !

மும்பை: 12 வயது சிறுமியை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கேட்ட காதலன் !

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பள்ளியின் முன் அமான் என்ற நபரை சந்தித்து இருக்கிறார்.இந்த சந்திப்பு முதலில் நட்பாக தொடர ஆரம்பித்தது.அதன் பின்பு நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் நாக்பாடாவில் உள்ள ஒரு அறைக்கு அச்சிறுமியையை அழைத்து சென்று சிறுமியின் நிர்வாண படங்களை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்ட தொடங்கியுள்ளனர்.அவனது மிரட்டலுக்கு பயந்த சிறுமி தனது வீட்டிலிருந்து முதலில் 3 லட்சம் பணத்தை திருடி அமானிடம் கொடுத்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அவன் மீண்டும் மிரட்ட சிறுமி பயந்து மறுபடியும் வீட்டிலிருந்து 2 லட்சம் பணம் மற்றும் நகைகளை திருட தொடங்கியுள்ளார்.இதனால் வீட்டிலிருந்து வைர மோதிரம் , நெக்லஸ், வைர வலையல்கள், தங்க செயின் ,தங்க லாக்கெட் உள்ளிட்ட நகைகளை திருட ஆரம்பித்து அமானிடம் கொடுத்திருக்கிறார்.

இச்செயலைத் தொடர்ந்து தங்களுடைய வீட்டில் நகைகள் மற்றும் பணம் காணாமல் போவதை அறிந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.வந்த புகாரை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினர் அனைவரையும் விசாரிக்கும் போது சிறுமியின் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.

சிறுமியை தனியாக அழைத்து சென்று போலிசார் விசாரித்த போது , சிறுமி தனது நிர்வாண படங்களை வைத்து அமான் மிரட்டுவதாகவும் பணம் தரவில்லை என்றால் தனது படங்களை இணையத்தில் பகிர்ந்துவிடுவேன் என்று மிரட்டியதால் திருடினேன் என ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அந்த சிறுமியை  படம் எடுத்து மிரட்டி  பணம் பறித்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் , பாலியல் வன்கொடுமைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்