வெவ்வேறு வண்ணங்களில் “ட்விட்டர் வெரிஃபிகேஷன் டிக்” : மஸ்க் திட்டம்

“ட்விட்டர் வெரிஃபிகேஷன் டிக்” : மஸ்க் புதிய திட்டம்

போலி கணக்குகளை களையெடுப்பதின் தொடக்கமாக அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்பதற்கு அத்தாட்சியாக வழங்கப்படும் ப்ளூடிக் வெரிஃபிகேசன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். மேலும் மாத சந்தாவாக 8 டாலர் செலுத்த வேண்டும் என்ற கட்டண நடைமுறையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நாளுக்கொரு விதமாக அறிவிப்புகளை வெளியிட்டு ட்விட்டர் பயனாளிகளை “இன்று என்ன?” என்ற வியப்பின் எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார் மஸ்க்.  

அப்படி ஒரு புது அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார் மஸ்க். கம்பெனிகளுக்கும், அரசாங்க துறைகளுக்கும், தனிநபர்களுக்கும் தனித்தனி வண்ணங்களில் வெரிஃபிகேஷன் டிக் வழங்குவதுதான் அந்த திட்டம்.

அதன்படி கம்பெனிகள் என்றால் அவற்றுக்கு தங்க நிறத்திலும், அரசாங்க துறைகள் என்றால் சாம்பல் நிறத்திலும், தனிநபர்களுக்கு அவர்கள் பிரபலங்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீலநிறத்திலும் அந்த வெரிஃபிகேஷன் டிக் இருக்குமாம்.

போலி கணக்குகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு வெரிஃபிகேஷன் விண்ணப்பமும் முறையாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே அங்கீகாரம் வழங்கப்படும் எனவும், சற்று சிரமத்திற்குரிய நடைமுறைகள்தான் என்றாலும் அவசியமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார் மஸ்க். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ப்ளூடிக் சேவையை மீண்டும் வருகிற நவ.29ல் இருந்து வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்