150 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய குயிங் வம்ச படகு மீட்பு !

150 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய குயிங் வம்ச படகு மீட்பு !

கலாச்சார நினைவுச்சின்னங்களின் புதையல் என்று நம்பப்படும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான படகு உயர் தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டது. 

இந்த படகு அப்பகுதியை 1644-1911 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி செய்த குயிங் வம்சத்தை சேர்ந்தது ஆகும்.

ஷாங்காய் பேரரசர் டோங்சியின் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு மரப் படகு யாங்சே நதி முகத்துவாரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் சேற்றில் புதைந்தது. இதனை மீட்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

இந்நிலையில் திங்கள் கிழமை நள்ளிரவு படகை சுற்றி 22 வில் வடிவத்திலான விட்டங்களை பொறுத்தி உருளைகளை ஏற்படுத்தி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்கப்பட்டது.

8 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் எடை கொண்ட படகு 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. அதனை ஷாங்காய் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்