உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி: ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த பைடன்

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி: ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த பைடன்
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, ​​உக்ரைனுக்கு மேலும் 625 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன், ரஷியா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்