ராணி சவப்பெட்டியின் பாதுகாவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவையொட்டி வருகிற 19ம் தேதி அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அவரை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ராணியின் சவப்பெட்டியைப் பாதுகாத்துக்கொண்டிருந்த ஒரு அரச காவலர் திடீரென மயங்கி மேடையிலிருந்து விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கம் நின்ற காவலர்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இதனால் அந்த பகுதியின் வீடியோவின் நேரடி ஒளிபரப்பு பல நிமிடங்களுக்கு துண்டிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் காவலர் மயங்கி விழும் வீடியோ வைரலான நிலையில், ஒரு சமூக ஊடக பயனர் ஒருவர், “இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. மயங்கி விழுந்தவர் நன்றாக இருக்கிறார் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.