10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு : ரஷ்ய அதிபர் புதின்

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு : ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிகையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுதொகை வழங்கப்பட உள்ளது.

ரஷ்யாவில் மக்கள்தொகையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக அதிபர் புதின் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13,500 பவுண்ட் (ரூ.13லட்சம்) பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

10-வதாக பிறக்கும் குழந்தைக்கு 1 வயது நிறைவடைந்தவுடன் இந்த தொகை கிடைக்கும் என்றும், போரில் அல்லது அவசரநிலையில் குழந்தைகளில் யாரேனும் உயிரிழந்தாலும் பரிசு கிடைக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1940 ஆம் ஆண்டு முதலே மக்கள்தொகையை அதிகரிக்கும் பொருட்டு ரஷ்யாவில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Find Us Hereஇங்கே தேடவும்