நாங்கள் கொரோனாவை வென்று விட்டோம் - அதிபர் கிம் ஜாங்

நாங்கள் கொரோனாவை வென்று விட்டோம் - அதிபர் கிம் ஜாங்

வடகொரியாவில் கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அதிபர் கிம் ஜாங் வெளிப்படையாகக் கூறியதில்லை .

மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது அந்த நாட்டினருக்கே வெளிச்சம். அந்த அளவுக்கு மிகவும் ரகசியம் காக்கும் நாடாக உள்ள வடகொரியாவில் கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச்  செய்திகள் வெளியாகி வந்தன. 

அந்த வகையில் இந்த கொரோனா பரவல்  காரணமாக வட கொரியாவில்  கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இருப்பினும் வடகொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 வாரங்களாக இன்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், கொரோனாவை வென்று விட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

இது குறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், "நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம். நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்