சீன எல்லை அருகே அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போர்ப்பயிற்சி...!

சீன எல்லை அருகே அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போர்ப்பயிற்சி...!

சீன எல்லை அருகே அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து வருடாந்திர போர்ப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

யுத்த அபியாஸ் என்ற பெயரில் அக்டோபர் 18 முதல் 31ம் தேதி வரை இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் அவுலியில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த போர் ஒத்திகை நடத்தப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக தைவான் எல்லை அருகே சீனா தனது போர்ப்பயிற்சி நடத்தி வரும் நிலையில் சீன எல்லையருகே இந்தியாவும் அமெரிக்காவும் போர்ப்பயிற்சியை நடத்தவிருக்கின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்