ஓடேசாவிலிருந்து வெளியேறியது உக்ரைனின் முதல் தானிய கப்பல்

ஓடேசாவிலிருந்து வெளியேறியது உக்ரைனின் முதல் தானிய கப்பல்

உக்ரைனின் ஓடேசா துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு கப்பல் வெளியேறியதாக அந்த நாட்டின் உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையைத் தொடர்ந்து, கருங்கடல் துறைமுகங்களிலிருந்து உலக நாடுகளுக்கு வெளியேற வேண்டி இருந்த பல மில்லியன் டன் உணவுத் தானியங்கள் ரஷ்யப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டன.

மேலும் இதனைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்பட்ட உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக பில்லியன் கணக்கான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்படைந்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி உக்ரைன் தனியா ஏற்றுமதியைத் தொடங்கியது .ஒடேசா துறைமுகத்தில் துருக்கி நாட்டுக் கப்பலில் தானியங்கள் ஏற்றப்படுவதை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், தானியங்கள் ஏற்றப்பட்ட பல கப்பல்கள் புறப்பட முடியாமல் துறைமுகத்தில் உள்ளதாகவும், அவை புறப்பட்ட பிறகு தானிய ஏற்றுமதி தொடங்கும் என அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானியம் ஏற்றப்பட்ட சரக்கு கப்பல்கள் இன்று புறப்பட உள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் கப்பலாக, ரசோனி சரக்கு கப்பல் 26,000 டன் தானியங்களுடன் லெபனானின் திரிபோலிக்கு புறப்பட உள்ளது.

மேலும் இதுகுறித்து ஒலெக்சாண்டர் குப்ராகோவ்  ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ள கருத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதல் தானியக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறியது என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்