ஆசியச் சுற்றுப் பயணத்தை உறுதி செய்த பெலோசி ; சீனா எதிர்ப்பு

ஆசியச் சுற்றுப் பயணத்தை உறுதி செய்த பெலோசி ; சீனா எதிர்ப்பு

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசிஆசியச் சுற்றுப் பயணத் திட்டத்தை உறுதி செய்துள்ளார் .

சீன அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெபலோசி தைவானைப் பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று கூறியிருக்கின்றனர்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெபலோசி ,சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .மேலும் இது குறித்து சீன எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 இன்று நான்சி பெபலோசி சிங்கப்பூருக்கு வருகை தரும் அவர் , தொடர்ந்து ஆசியாவில் உள்ள நான்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் சீன அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளன .

 சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடன் காணொலி வாயிலாக  ஐந்தாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீனா அதிபர், தைவான் தொடர்பான விவகாரத்தில் சீனாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலாகச் சீன அரசு பிரதிபலிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என்றும் கடுமையாக எச்சரித்தார். 

ஆனால் சீனாவின் கருத்தை அமெரிக்க மதிக்க வேண்டும் என்றும் கூறினார். சீனாவின் அண்டை நாடான தைவானுக்கு அமெரிக்கப் பிரதிநிதி நான்சி விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தி சீனாவை ஆத்திரமூட்டியுள்ளது. தைவான் சீனாவின் ஒரு பகுதியாகச் சீனா கூறி வருகிறது. 

இந்த நிலையில் ராணுவம் தொடர்பான அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க பிரதிநிதியுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன ராணுவம், ராணுவ பயிற்சி தைவானுக்கு அருகாமையில் உள்ள பின்தான் தீவுகளில் ஒத்திகை நடத்தி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்