நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டர் கணக்கில் 5.5 ஆக பதிவு

நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டர் கணக்கில் 5.5 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் கணக்கில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Find Us Hereஇங்கே தேடவும்