அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென தோன்றிய சிகப்பு புள்ளி... அதிர்ந்து போன விமானி...!

அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென தோன்றிய சிகப்பு புள்ளி... அதிர்ந்து போன விமானி...!

அட்லாண்டிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த போது வானத்தில் திடீரென தோன்றிய சிகப்பு நிற புள்ளியை விமானி ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்பட்ட வினோதமான  சிகப்பு நிறத்தில் ஒளிரும் புள்ளி தான் தற்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த போது விமானி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமானது அனைவரையும் ஒருவிதமான பயத்தில் ஆழ்த்தியுள்ளது. ரெடிட் என்ற விமானியால் பகிரப்பட்ட அந்த பதிவில் “அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது முன்னால் வானத்தில் சிவப்பு ஒளிரும் புள்ளிகள் இருந்தன. இது போன்ற நிகழ்வை நான் இதுவரை பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

வானத்தில் ஒளிர்ந்த சிகப்பு நிற புள்ளிகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சௌரி மீன்கள் பிடிப்பதற்காக சில கப்பல்கள் இதுபோன்ற சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர் கூறுகையில் நாம் அனைவரும் உலகின் கடைசி இடத்திற்கு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

மேலும், சிலர் கூறுகையில் “இயற்கையின் அழகில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் இது எல்லாம் ஒரு அரிய நிகழ்வா என்று கேலி செய்து வருகின்றனர். 

Find Us Hereஇங்கே தேடவும்