இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை அதிகரிக்கும் ரஷ்யா...!

இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை அதிகரிக்கும் ரஷ்யா...!

இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை ரஷ்யா அதிகரித்து வருகிறது. இந்தியா ஆண்டுக்கு மொத்தம் 23 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. அதில், 16 சதவீதம் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 கோடியே 20 லட்சம் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்து இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 லட்சம் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரலில் 30 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு ஒரு கிலோ தேயிலை 187 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 144 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

தேயிலை வாங்குபவர்கள் அமெரிக்க டாலரை விட ரூபாய் அல்லது ரஷ்யாவின் ரூபிள் அடிப்படையில் வர்த்தகம் செய்ய வலியுறுத்துவதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதன் பலன் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்