காமன்வெல்த் தொடக்க விழா: பிவி.சிந்து, மன்ப்ரீத் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி

காமன்வெல்த் தொடக்க விழா: பிவி.சிந்து, மன்ப்ரீத் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி

இங்கிலாந்தில் தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் பங்கேற்ற பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங் ஆகியோர், தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.

இங்கிலாந்தில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழா அணிவகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.மேலும் இந்திய அணியில் 215 வீரர்,வீராங்கனைகள் இடம் பெற்றனர் 

மேலும் இந்த விழாவில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத்சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தி சென்றுள்ளனர் .

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த தொடர் மிக அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்திய வீரர், வீராங்கனைகள் முன்பைவிட அதிக பதக்கங்களை இந்த தொடரில் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்