கொலம்பியாவில் 200 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக இடதுசாரி ஆட்சி...

கொலம்பியாவில் 200 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக இடதுசாரி ஆட்சி...

 200 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக கொலம்பியாவில் இடது சாரி கட்சி  ஆட்சி அமைந்துள்ளது . 

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 200 ஆண்டுக்கால பழமை வரலாற்றில் முதல் முறையாக வலது சாரி கட்சியின் ஆட்சியை பின்னுக்குத் தள்ளி , இடது சாரி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது . அந்த  கட்சியின் அதிபராக கஸ்டோவோ பெட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 

கடந்த சில நாட்களாகவே தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் ஏற்பட்ட வறுமையால் மக்கள் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன . 

ஆனால்  எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் வலது சாரி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்தன.

அதனால் கொலம்பியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது . அதில் இடது சாரி கட்சியைச் சேர்ந்த கஸ்டோவோவும்  , வலது சாரி கட்சியைச் சேர்ந்த ஹெர்னாண்ட்ஸ்வும் போட்டியிட்டனர் .

நடந்த அதிபர் தேர்தல் போட்டியில் 50.48 சதவீத வாக்குகளைப் பெற்று கஸ்டோவோ வெற்றி பெற்றார் . 47.3சதவீத  வாக்குகளைப் பெற்று ஹெர்னாண்ட்ஸ் தோல்வியுற்றார் . இதனைத் தொடர்ந்து கொலம்பியாவின் அதிபராக கஸ்டோவோ பெட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 

Find Us Hereஇங்கே தேடவும்