480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து இரு குழந்தைகளின் தாய் உலக சாதனை..!

480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து இரு குழந்தைகளின் தாய் உலக சாதனை..!

லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் தனி ஆளாக 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் கடந்திருப்பது கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளது.

புனேவைச் சேர்ந்த பிரீத்தி மாஸ்கே, எல்லைச் சாலை அமைப்புடன் இணைந்து லேவில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

55 மணி நேரம் 13 நிமிடங்களில் மணாலியை அடைந்து அவர் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரம் உயரச் சாலையை கடந்து பிரீத்தி படைத்த சாதனையை அங்கீரிக்கும் பணியில் கின்னஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்