ஜி7 மாநாட்டில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்

நாளை தொடங்க இருக்கும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று ஜெர்மன் செல்ல உள்ளார் .

 நாளை தொடங்க இருக்கும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காகப்  பிரதமர் மோடி இன்று ஜெர்மன் செல்ல உள்ளார் . 

முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் அமைப்பே ஜி7 ஆகும் .அதாவது groups of  seven.இதில் கனடா ,பிரான்ஸ் ,இத்தாலி ,அமெரிக்கா , ஜெர்மன் , பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்றிருந்தன . 

சுதந்திரம் , ஜனநாயகம் , மனித உரிமை , சட்ட ஒழுங்கு , செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற கொள்கைகளோடு , தங்கள் சமுகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களைக் கருதிக் கொள்கின்றன . 

வரும் ஜூன் 26,27 ஆகிய  தேதிகளில் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது .ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின்  பேரில் , ஜெர்மனில்  ஸ்க்லோஸ் எல்மாவ் , ஜெர்மன் பிரசிடென்சியின்  கீழ் நடைபெறும்  ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்  பிரதமர் மோடி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் வினய் க்வாட்ரா தெரிவித்துள்ளார்.  

மேலும் இம்மாநாட்டில் சுற்றுச்சூழல் , பருவ காலநிலை , எரிசக்தி , உணவு பாதுகாப்பு , சுகாதாரம் , பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளன. 

அதோடு  இந்த ஜெர்மன் பயணத்தை முடித்த பின் ஜூன் 28-ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார் ..அங்கு மறந்த அதிபர் ஷேக் காலிஃபா பீன் சயீது அல் நயான் மறைவுக்குத் தனிப்பட்ட முறையில் துக்கம் விசாரிக்கச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது . 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com