TikTok உலகில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட பெருமை பெற்றார் செனகலை சேர்ந்த 22 வயதான காபி லேம்.
TikTok உலகில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட பெருமை பெற்றார் செனகலை சேர்ந்த 22 வயதான காபி லேம்.
நகைச்சுவை வீடியோக்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான சமூக ஊடக நட்சத்திரமான காபி லேம் தற்போது புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். டிக்டாக் உலகின் முன்னணி படைப்பாளியான சார்லி டி அமெலியோவை பின்னுக்குத்தள்ளி காபி லேம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
செனகலை சேர்ந்த 22 வயதான காபி லேம் லைஃப் ஹேக்குகளை எளிமைப்படுத்தவும் சரிசெய்யவும் மற்ற வைரல் டிக்டாக்குகளை வைத்து டூயட் பாடுவதன் மூலம் புகழ் பெற்றார். இத்தாலியில் ஒரு தொழிற்சாலை தொழிலாளியாக பணியாற்றி வந்த காபி லேம் கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா காரணமாக தனது வேலையை இழந்துள்ளார். அதன் பின், TikTok இல் வீடியோக்கள் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸிடம் அளித்த பேட்டி ஒன்றில் ”எனது முகமும் எனது வெளிப்பாடுகளும் மக்களை சிரிக்க வைக்கின்றன" என்று காபி லேம் கூறியுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வீடியோக்களை பதிவு செய்து வந்த காபி லேம்க்கு உலகளவில் சிகர் பட்டாளம் உருவாகியது. இறுதியாக காபி லேம் TikTok உலகில் 14.2 கோடி பேர் பின்தொடர்பவர்களை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.