உலகளவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,200 ஆக உயர்வு...!
உலகளவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
உலகளவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
உலகளவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை வேகமாக பரவி வரும் நிலையில் அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் பரிசீலக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழன் அன்று அவசர குழு ஒன்றை கூட்டினார். அப்போது பேசிய அவர் “குரங்கை அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என்று கூறினார்.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “குரங்கை அம்மை நோயை உலகளாவிய அவசர நிலையை அறிவிப்பதன் நோக்கம், மே மாதத்தில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது தற்போது வரை நாற்பத்தெட்டு நாடுகளில் பதிவாகியுள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக பரவலாக மாறி வருவதால் தொற்றின் வேகம் அதிகரித்து குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மேலும், மத்திய ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1,500 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 70 பேர் இறந்துள்ளதாகவும் டெட்ரோஸ் கூறியுள்ளார்.