தரையிறங்கும் போது திடீரென தீ பற்றிய ராணுவ சரக்கு விமானம்...!

தரையிறங்கும் போது திடீரென தீ பற்றிய ராணுவ சரக்கு விமானம்...!

ரஷ்யாவின் ரியாசான் நகருக்கு அருகே ராணுவ சரக்கு விமானம் தரை இறங்கும் போது திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

llyushin ll-76 என்ற சரக்கு விமானத்தில் மொத்தமாக 9 பேர் பயணித்துள்ளனர். ரியாசான் பகுதியில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் தீ பற்றியதில் அதில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காயம் அடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் என்ஜின் கோளாறால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்