மூழ்கும் கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு!

மூழ்கும் கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு!

கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக காப்பற்றினர்.

எம் வி பிரின்ஸ் என்ற சரக்கு கப்பல் கண்டெய்னர்களுடன் மலேசியா நாட்டில் இருந்து எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென கடலில் ஏற்பட்ட ராட்சத சூறாவளி புயல் காரணமாக அந்த கப்பல் மங்களூர் துறைமுகம் நோக்கி வந்த போது சுமார் ஒரு கடல்மைல் தொலைவில் தரைதட்டியது.

தகவல் அறிந்த இந்திய கடலோர காவல்படையினர் விரைந்து சென்று கப்பலில் சிக்கி தவித்த 15 பேரை 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர்.

Find Us Hereஇங்கே தேடவும்