நாளை தொடங்குகிறது பிரிக்ஸ் மாநாடு!

நாளை தொடங்குகிறது பிரிக்ஸ் மாநாடு!

நாளை தொடங்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுவார் எனத் தெரிகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார்.

பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும்.

ரஷ்யா, தென்னாப்பிடிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

தீவிரவாத எதிர்ப்பு, வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்