முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது தென்கொரியா...!

முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவியது தென்கொரியா...!

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை இரண்டாவது முயற்சியில் தென்கொரியா விண்ணில் ஏவியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முயற்சியில் ராக்கெட்டின் இயந்திரம் திட்டமிட்டதை விட முன்னதாக எரிந்ததால் சுற்றுப்பாதையில் ராக்கெட் நுழைய முடியவில்லை.

தற்போது நூரி ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளதால் தனது சொந்த தொழில்நுட்பத்தில் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் உலகின் 10வது நாடாக தென்கொரியா மாறியுள்ளது.

வரும் ஆண்டுகளில் மேலும் 4 நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுகணைகளை உருவாக்கவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்