வானத்தில் திடீரென தோன்றிய நீல வண்ண சுருள்...!

வானத்தில் திடீரென தோன்றிய நீல வண்ண சுருள்...!

வானத்தில் திடீரென தோன்றிய நீல வண்ணத்தில் சுருள் போன்று தோன்றியதால் மக்கள் பீதியடைந்தனர். 

நியூசிலாந்தில் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் போன்று தோன்றியுள்ளது. இதனை ஏலியன்கலின் பறக்கும் தட்டு என பலர் சந்தேகித்தனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள், "ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதைக்குக் கொண்டு சென்ற போது நீள வர்ண சுருள் உருவாக்கியிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் "ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து சூரிய ஒளியில் படும் போது வண்ண சுருள் உருவாகியிருக்கலாம்" என ஆக்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்