உலகம்
ஜப்பான் கடல்பகுதியில் பறந்த சீனா-ரஷ்யா ஜெட் விமானங்கள்!
ஜப்பான் கடல்பகுதியில் பறந்த சீனா-ரஷ்யா ஜெட் விமானங்கள்!
குவாட் மாநாடு நேற்று நடைபெற்ற போது, ஜப்பான் விமானப் பரப்பு அருகே கடல் மீது திடீரென சீனா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்கள் வட்டமிட்டன.
குவாட் மாநாடு நேற்று நடைபெற்ற போது, ஜப்பான் விமானப் பரப்பு அருகே கடல் மீது திடீரென சீனா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்கள் வட்டமிட்டன.
வழக்கமான ரோந்துப் பணிதான் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கடல்பகுதி, கிழக்கு சீனா கடல் பகுதி மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதி ஆகியவற்றில் ரோந்து நடந்ததாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு ஜப்பான் தனது ஜெட் விமானங்களை தயார் நிலையில் வைக்க நேர்ந்தது.
இதே போல் சீனாவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கடல் பாதையை கடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களில் 300 ஜெட் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.