கார் விபத்து:பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி...!!

கார் விபத்து:பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி...!!

மகாராஷ்டிரா மாநிலம், செல்சுரா அருகே உள்ள பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேரும் பரீட்சை முடித்துவிட்டு,விருந்தில் கலந்து கொண்டு நேற்று(ஜன.24) 11:30 மணியளவில் காரில்  திரும்பிக் கொண்டிருந்த போது, வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது காட்டுப்பன்றி அவர்களின் வாகனத்தில் மோதியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்