ஜெர்மனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

ஜெர்மனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

ஜெர்மனியில்புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளார் பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜெர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளார் பிரதமர் ஓலாப் ஷோல்ஸ்.

இந்நிலையில் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு மட்டும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வைரஸ் பரவல் குறையும் சூழலில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி மத்தியில் ஒமைக்ரான் தொற்று பரவல் உச்சம் தொடும் என சிறப்பு சுகாதார குழுவின் எச்சரிக்கையை அடுத்து இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்