நேதாஜியின் பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி புகழாரம்!

நேதாஜியின்  பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன் :  பிரதமர் மோடி புகழாரம்!
நேதாஜியின் 125-வது பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன் என  பிரதமர் மோடி புகழாரம் சுட்டியுள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்தநாள் இன்று(ஜன.23) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் பராக்கிரம் திவாஸ் வாழ்த்துக்கள்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலிகள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ஜெயந்தி தினமான இன்று அவருக்கு தலைவணங்குகிறேன்.நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம்”, என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்