சீனா ஓட்டலில் புதுமை! ஓட்டல் அறையில் இருந்தபடியே புலியை நேரடியாக பார்க்கலாம்!

சீனா ஓட்டலில் புதுமை! ஓட்டல் அறையில் இருந்தபடியே புலியை நேரடியாக பார்க்கலாம்!

சீனா ஓட்டலில் புதுமை! ஓட்டல் அறையில் இருந்தபடியே புலியை நேரடியாக பார்க்கலாம்!

 புதுமையான விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பதில் சீனர்களுக்கு ஆர்வம் அதிகம். சில நேரங்களில் அவை சர்ச்சையாவதும் உண்டு. அந்த வகையில், சீனாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.

குண்டு துளைக்காத கண்ணாடியால் பிரிக்கப்பட்ட அறையின் மற்றொரு புறத்தில் புலியை உலவ விட்டப்பட்டுள்ளது. தங்கியிருக்கும் அறையிலிருந்து அந்த புலியை கண்ணாடியின் வழியாகப் பார்க்கலாம். 'மிருக அறைகள்' என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

 ஆன்லைனில் வெளிவந்த அறையின் காட்சிகளில், கண்ணாடியால் பிரிக்கப்பட்ட அறைக்குள் ஒரு வெள்ளைப்புலி சுற்றித் திரிவதைக் காட்டியது.

 இந்த வீடியோ சீனாவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து இத்திட்டம் மறு மதிப்பீடு செய்யப்படும் என்று ஒரு சீன அரசு அதிகாரி தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்