அமெரிக்காவில் கால்பதித்த ஓமிக்ரான்... அச்சத்தில் மக்கள்..!!

அமெரிக்காவில் கால்பதித்த ஓமிக்ரான்... அச்சத்தில் மக்கள்..!!

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்  தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் 50 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இதனின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும்  கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து அனைத்து நாடுகளும் தொற்று பரவலை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில்  பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ளன. 

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து  நவம்பர் 22ம் தேதி அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29ம் தேதி ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளதாக அமெரிக்க அரசு தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து  நவம்பர் 22ம் தேதி அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29ம் தேதி ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியபோதும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் அவருடன் தொடர்ப்பில் இருந்த அனைவரையும் கண்டறியப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்கர்கள் விரைவில் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஃபவுசி அறிவுறுத்தியுள்ளார். 

இதன் காரணமாக அமெரிக்கர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்