விண்ணை முட்டும் விமானக் கட்டணம்!!

ஒமிக்ரான் வைரஸ் பீதி!

ஒமிக்ரான் வைரஸ் பீதி!

விண்ணை முட்டும் விமானக் கட்டணம்!!

ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதையடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. 

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. 

இதையடுத்து பல்வேறு நாடுகளுக்கான் விமானக் கட்டணங்களை, விமான நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. 

டெல்லியில் இருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு இதுவரை 80 அயிரம் ரூபாயாக இருந்த விமானக் கட்டணம், தற்போது, 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கான கட்டணமும் உயர்த்தப்படுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்