கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு!!

கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு!!

கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் கேரளாவில் கடந்த 10 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் 10 அணைகளில்  சிவப்பு எச்சரிக்கையும் , 8 அணைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வரும் 24 ஆம் தேதி வரை கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால்  இடுக்கி அணை முழு கொள்ளவில்  94.19 சதவீதம் நீர் தேக்கப்பட்டுள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதனால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்