பசு வளர்ப்பின் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் பொறியியல் பட்டதாரி!!

பசு வளர்ப்பின் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் பொறியியல் பட்டதாரி!!

பொறியாளர் வேலையை உதறித் தள்ளிவிட்டு பசு வளர்ப்பின் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் கர்நாடகாவை சேர்ந்த ஜெயகுரு என்ற இளைஞர்.

ஏராளமான மக்கள் கால்நடைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர்  பால் மற்றும் அதன் துணைப் பொருட்களை விற்கிறார்கள், சிலர் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கரிம உரத்தை கூட விற்று வருகிறார்கள்.  ஆனால், கர்நாடகாவின் முண்டுரு பகுதியை சேர்ந்த ஜெயகுரு என்ற இளைஞர் தனது தந்தையின் மாட்டுப் பண்ணையை சற்று மாற்றியமைத்து,அதில்  பால் மற்றும் உரம் மட்டுமல்ல, மாடுகளை குளித்தபின் மாட்டுக்கொட்டகையிலிருந்து வெளியேறும் நீரையும் விற்று மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார். 

இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், மாட்டின் பால், சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை மதிப்புக்கூட்டி தினமும் விற்பதாகவும், பத்து மாடுகளில் தொடங்கி தற்போது 130 மாடுகள் தன் பண்ணையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்