ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 32பேர் பலி!!

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 32பேர் பலி!!

ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் உள்ள ஷியா பிரிவினருக்குச் சொந்தமான மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள ஷியா பிரிவினருக்குச் சொந்தமான மசூதியில் வழக்கம்போல் தொழுகை நடைபெற்றது. அப்போது  திடீரென அந்த மசூதியில் சக்தி வாய்ந்த  குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த  50க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை  

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காபூலில் உள்ள மசூதியில் தொழுகையின் போது நடந்த குண்டு வேண்டிப்பில் 100 க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது

Find Us Hereஇங்கே தேடவும்