நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை..!

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. பெரும்பாலான மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பிறகே பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்