நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதி!!

நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதி!!
நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதால் மின்தடை ஏற்படாது என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார்.

நிலக்கரி பற்றாக்குறை குறித்து இன்று(10-10-2021) டெல்லியில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உடன் ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான நிலக்கரி கிடைக்கிறது.மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறாக உள்ளது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன் ஆகும், இது 4 நாட்களுக்கு தேவையானது.

அதன் பிறகு,மின் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 1.7 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.நான் நிலக்கரி மற்றும் சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியுடன் தொடர்பில் இருக்கிறேன்.

மேலும்,நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களுக்கு தேவையான அளவு எரிவாயுவை தொடர்ந்து வழங்குமாறு நான் கெயில் சிஎம்டியிடம் கேட்டேன். விநியோகம் தொடரும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். கடந்த காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இல்லை, எதிர்காலத்தில் அது நடக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்