லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்‌ரா கைது!

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்‌ரா கைது!

லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து விசாரணைக்கு 9ஆம் தேதி அஜய் மிஸ்ரா அஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராக வில்லை. இதனை தொடர்ந்து, நேற்று அஜய் மிஸ்ரா கண்டிப்பாக அஜராகும் படி அவரது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.  

இந்நிலையில், லக்கிம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று(09-10-2021) காலை வந்த ஆஷிஷ் மிஸ்ரா, போலீசார் முன் ஆஜரானார். அவரிடம், டி.ஐ.ஜி., உபேந்திர அகர்வால் தலைமையில் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். 

 இதையடுத்து, நேற்று நள்ளிரவு 11:00 மணிக்கு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்