காலணிகளை சரியாக கழற்றி விடாத மனைவி: வழக்கு தொடர்ந்த கணவன்..!

காலணிகளை சரியாக கழற்றி விடாத மனைவி: வழக்கு தொடர்ந்த கணவன்..!

அமெரிக்காவில் காலணிகளை கழற்றி சரியான முறையில் ரேக்கில் வைக்காத மனைவி மீது கணவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் மனைவி காலணிகளை கழற்றி சரியான முறையில் ரேக்கில் வைக்காததால், தான் வெளியே சென்றபோது அவரது காலணிகளால் தடுக்கி பேலண்ஸ் பண்ண முடியாமல் படியில் தடுக்கி கீழே விழுந்ததாக கணவன் ஜான் வால்வொர்த் மனைவி மீது 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 

படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்தார். மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 80,000 டாலர் (ரூ.60 லட்சம்) செலவழித்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் கூறினார்.  

இந் நிலையில், மனுதாரரின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்