டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை; பிரதமர் மோடி வரவேற்பு!!

டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை; பிரதமர் மோடி வரவேற்பு!!

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்துள்ளார். அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி  வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்று உபசரித்தார். இதையடுத்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் டெல்லி ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்டேபிரெட்ரிக்சன், "எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நினைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்