ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு ஏன்? ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு விளக்கம்!!

ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு ஏன்? ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு விளக்கம்!!

ஆப்கானிஸ்தானில்  உள்ள மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின்  பிரிவான ஐ.எஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறினர். இதனை தொடர்ந்து அங்கு  ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். 

இந்நிலையில், குண்டுஸ் மாகாணத்தில் நேற்று(08-10-2021) மதியம், மசூதியில்  தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதியை குறிவைத்து பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததுள்ளது.  இதில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும்  90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின்  பிரிவான ஐ.எஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், சீனாவின் வலியுறுத்தலால், உய்கா் முஸ்லிம்களை ஒடுக்க முனையும் தலிபான்கள் மற்றும் ஷியா பிரிவினருக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்