பாகிஸ்தானால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உலகு!.. – ஐநா பொதுகூட்டத்தில் சிநேகா துபே…

பாகிஸ்தானால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உலகு!.. – ஐநா பொதுகூட்டத்தில் சிநேகா துபே…

காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா பொது சபைக்கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியும், செயலாளருமான ஸ்னேகா துபே பேசியுள்ளார்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலவச்செய்ய முடியும் என்று தெரிவித்தவருக்கு பதிலடியாக  ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியும் செயலாளருமான ஸ்னேகா துபே, ஒரு கட்டிடத்திற்கு தீயும் வைத்து விட்டு, அத்தீயை அணைக்கவும் முற்படுவது போல பாகிஸ்தானின் செயல் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் , பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விடுவதாகவும், இதனால் உலகமே ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இந்நிலையில், உலக அரங்கில் பொய்யை பரப்பும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை தங்களுக்கு இருப்பதாகவும், காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான் என்று தெரிவித்துள்ளார் சிநேகா.

இக்கூட்டத்தில், உலகையே அதிரவைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான்தான் என்று சிநேகா தெரிவித்த போது, அதை எந்த ஒரு நாடும் எப்போதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பின்லேடன் போன்றொரு நபரை, பாகிஸ்தான் தியாகி போல் இப்போதுவரை சித்தரித்து வருவதாக வருத்தம் தெரிவித்த அவர், பாகிஸ்தான் அமைதியை மீட்க நினைத்தால், அதற்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து, அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை என்று ஐநா சபையில் இந்தியாவின் இளம் செயலாளர் ஸ்னேகா துபே அதிரடி காட்டியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்