நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு: அமெரிக்க-இந்திய நல்லுறவு நற்காரணகாரியங்களுக்காக வலுப்படும்!..

நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு: அமெரிக்க-இந்திய நல்லுறவு நற்காரணகாரியங்களுக்காக வலுப்படும்!..

 அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ஜோ பைடனை முதன்முறையாக நேரில் சந்தித்து பல்வேறு உலக விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக குவாட் மாநாடு, ஐக்கிய நாடுகளின் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, நேற்று வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை அவர் அதிபராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நேரில் சந்தித்தார். வெள்ளை மாளிகைக்கு சென்ற நரேந்திர மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இருநாட்டு நல்லுறவு மேம்பாடு குறித்து விவாதித்த மோடியும், பைடனும், பொருளாதாரம், வர்த்தகம், காலநிலை மாற்றம், பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரம், சீனாவுடனான எல்லை பிரச்சனை போன்றவை குறித்து பைடனுக்கு பிரதமர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

இந்த சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள பைடன், இந்திய-அமெரிக்க உறவு பல்வேறு உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமையும் என தெரிவித்தார். மேலும், பருவநிலை மாற்றம், இந்தோபசிபிக் பிராந்திய பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களை சந்தித்த மோடி, இரு நாட்டு உறவு அதிபர் பைடனின் மூலம் மேலும் வலுப்படப்போவதாக தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்