பிரியாணிக்காக 27 லட்சம் பில் கட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!..

பிரியாணிக்காக 27 லட்சம் பில் கட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!..

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்து அணி வீரர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு , ரூபாய் 27 லட்சத்தை பிரியாணி சாப்பிட்டதற்காக கட்டணமாக செலுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடனான தொடரில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணமாக தொடரை ரத்து செய்து தாய்நாட்டிற்கே திரும்பியுள்ள நிலையில், அந்த அணி வீரர்களுக்காக 8 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  500 காவல்துறையினருக்கு 2 வேளை பிரியாணி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான கட்டணமாக 27 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இத்தொடர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், நியூசிலாந்து அணிக்கு வந்த மிரட்டலென்பது இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்