மாற்றுத்திறனாளிகள் எழுந்து நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி!

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுந்து நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள்,நாடு முழுவதும் 33 மாவட்டங்களில் வாராந்திர தொற்று பாதிப்பின் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால் பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், தொற்று பாதிப்பு 5 சதவீதத்திற்கு மேல் உள்ள மாவட்டங்களிலும் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுந்து நடமாட முடியாதவர்களின் வீட்டுக்கே சென்று தடுப்பு ஊசி செலுத்தப்படும்.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு  இதுவரை 66 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி உள்ளனர்.23 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ்யும்  செலுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு இங்கிலாந்து செல்பவர்களை பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தும் விதிமுறைகள் பாரபட்சமாக இருக்கிறது இதனால் இது தொடர்பாக இருநாடுகளுக்கிடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்