வெளியேறாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும்

மோசமான விளைவுகள் நேரிடும்: அமெரிக்கா, பிரிட்டன் படைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை
வெளியேறாவிட்டால் மோசமான விளைவுகள் நேரிடும்

அமெரிக்கா, பிரிட்டன் படைகள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் 31ஆம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள், அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், "அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படையினர் மக்களை மீட்பதாக கூறி ஆப்கானிஸ்தானில் தங்கும் முயற்சியை நாங்கள் ஆக்கிரமிப்பாகவே கருதுகிறோம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைத்து படைகளும் வெளியேறாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com