உலகம்
ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை வெளியேற்றிய அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை வெளியேற்றிய அமெரிக்கா..!
ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியது
ஆப்கானிஸ்தானில் இருந்து 48,000 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், அந்நாட்டில் வசித்து வந்த தங்களது நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்களையும் அமெரிக்கா விமானம் மூலம் வெளியேற்றி வருகிறது.
இந்த நிலையில், "ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 48,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து நேற்று ஒரே நாளில் 10,900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ஜூலை மாத இறுதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 53,000 மக்கள் வெளியேற்றப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.