மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழக பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழக பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மலைவாழ் மக்களுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் தமிழக பெண்மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.அப்போது பேசிய அவர், நீலகிரி மலைப்பகுதியில் இருக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வர உதவியாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ராதிகாவின் பணி பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.
 
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் ராதிகா சாஸ்திரி என்ற பெண் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் சிகிச்சை வசதிக்காக AmbuRX என்ற பெயரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருவதற்கு தங்களின் வழக்கமான பணியை செய்து கொண்டே சமூகத்திற்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு ராதிகா உதாரணமாக திகழ்வதாக பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்