பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; மக்கள் பீதி!

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; மக்கள் பீதி!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே நேற்றி இரவு  8.49 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது என்று  அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 104.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்